பாஜக விழாவில் 2 ஆயிரம் ஹீலியம் பலூன்கள் வெடித்து சிதறியது..!
சென்னை அடுத்தபாடியில் நடைபெற்ற பாஜக விழாவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிறுவர்கள் உட்பட பலருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. திருவலிதாயம் சிவன் கோவில் முன் மோடி பிறந்த நாளையொட்டி 2000 ஹீலியம் பலூன்கள் பறக்க விட பாஜகவினர் ஏற்பாடு செய்து இருந்தனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குழுமி இருந்தனர்.
அப்போது அங்கு வந்த பாஜக விவசாயி மாநில துணைத்தலைவர் முத்துராமலிங்கத்தை வரவேற்று வெடிக்கப்பட்ட பட்டாசிலிருந்து வெடிக்கப்பட்டு ஹீலியம் பலூன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
பலூன் தீக்காயம் பட்ட சிறுவர்கள் அழுதபடி அருகில் கடையில் இருந்த தண்ணீரை தங்கள் மீது ஊற்றிக்கொண்டனர் .விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






