சைக்கிளில் சென்ற நபர் தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற விழுந்து விபத்து..!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்றவர் தலைகுப்புறக் கீழே விழுந்தார்.
அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சாலை நன்றாக உள்ளதால் தேசிய நெடுஞ்சாலை என்பதை மறந்து பலர் வேகமாக சைக்கிள் ஓட்டுவதால் விபத்து ஏற்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





