தமிழ்நாட்டை தொடர்ந்து கன்னடத்தில் ட்ரெண்டாகும் “இந்தி கொத்தில்லா ஹோகோ”
தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் ஹிந்திக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது .இந்தி தெரியாத போடா என்ற வாசகங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. அதையடுத்து அதே வாக்கியத்தை கன்னடத்தில் மொழிபெயர்த்து கர்நாடகாவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் தனஜெயா ஆகியோர் இந்தித் திணிப்புக்கு எதிரான கனட எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டீசர்ட் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் பெங்களூரு ரயில் நிலையத்தின் பெயர் பலகையில்பொறிக்கப்பட்டிருந்தது எழுத்துக்களை எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.






