வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பா?
பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் ஏதேனும் இருக்குமா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனுக்கு அருகில் உள்ள வெள்ளி கிரகத்தின் வெப்பநிலை 900 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த கிரகத்தை பற்றி ஆய்வில் இங்கிலாந்து விஞ்ஞானி தலைமையிலான குழுவினர் ஈடுபட்டபோது வெள்ளி கிரகத்தின் அமில மேகங்களில் இருந்து பாஸ்பின் வாயுவின் தடயத்தை கண்டுபிடித்தனர். நிறமற்றதும் எளிதில் தீ பிடிக்க கூடியதும் துர்நாற்றம் அடிக்க கூடிய இந்த வாயு ஒரு மடங்கு பாஸ்பரஸ் மற்றும் மூன்று மடங்கு ஹைட்ரஜன் என்ற அளவில் உருவாகும் வாயு ஆகும்.
எனவே வெள்ளி கிரகத்தில் இந்த வாயு இருப்பதன் மூலம் இருப்பது உறுதியாகியுள்ளது. மனிதர்கள் உயிர்வாழ ஹைட்ரஜன் வாயுவும் தேவை என்பதால் உறுதியாக வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சூழ்நிலை பிரகாசமாக உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.







