போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைக்கு திருமணம் முடிந்துவிட்டதா..!
போதைப்பொருள் விவகாரத்தில் கைதான கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியும் டாக்டர் ஒருவரின் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த 8ஆம் தேதி சஞ்சனா வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்த சென்றபோது அவசரமாக ஒருவர் வெளியேறியுள்ளார்.
அவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் டாக்டர் ராஜேஷ் பாஷா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சஞ்சனாவும் அவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
இரண்டு பேரும் அமெரிக்காவில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அது உண்மையா என உறுதியாக தெரியவில்லை.







