முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடைபெறும் கொரொனா பரிசோதனை..!
தமிழக சட்டப்பேரவை கூடுவதை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பவர்களுக்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக கொரொனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று பரிசோதனை நடத்தப்பட்டது. கூட்டத்தொடரில் பங்கேற்க இருக்கும் செய்தியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.







