--- --:--:-- --

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது..!

1.1

நீட் தேர்வினை ஒத்தி வைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. கொரொனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வை 3 வாரங்களுக்கு ஒத்தி வைக்க கோரி வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

 

இதை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வை ஒத்தி வைக்கும் வழக்கில் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட நிலையில் அதை ஏன் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அண்மையில் முடிந்த ஜெஇ‌இ நுழைவுத் தேர்வுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பல மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் அப்போது சுட்டிக்காட்டப்பட்டது.

 

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் யுஜிசி விதிமுறைகள் நீட் தேர்வுக்கு பொருந்தாது என்றும் தேர்வு தேதியை மாநிலத்திற்கு மாநிலம் மாற்ற முடியாது எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர். மருத்துவ படிப்புக்கான தேர்வுகள் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon