--- --:--:-- --

நடிகர் ஜெயபிரகாஷ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்..!

10

தெலுங்கு, தமிழ் உள்ளிட்டமொழிகளில் வில்லனாகவும் காமெடி நடிகராகவும் வலம் வந்த நடிகர் ஜெயபிரகாஷ் மாரடைப்பு காரணமாக ஆந்திர மாநிலம் குண்டூரில் உயிரிழந்து விட்டார். அவருக்கு வயது 72. குண்டூரில் தனது வீட்டில் இன்று காலை குளியலறைக்கு சென்று ஜெயபிரகாஷ் நீண்ட நேரமாகியும் வெளியேறவில்லை.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தது தெரியவந்தது. காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் நாடகம் மற்றும் நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

 

பின்னர் சினிமா துறையில் கால்பதித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வில்லனாகவும் காமெடி நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தெலுங்கில் பிரமோதூத தமிழில் உத்தமபுத்திரன், ஆறு, ஆஞ்சனேயா உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளார்.

 

ஊரடங்கால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனால் குண்டூரில் தனது வீட்டில் வசித்து வந்த ஜெயபிரகாஷ் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தெலுங்கு திரைப்படத் துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon