திருப்பூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தலவாய்பட்டனத்தை சேர்ந்த சங்கர், கார்த்திகா தம்பதியின் 3 வயது மகன் தனது வீட்டின் அருகே பழுதடைந்து மேற்கூரை அகற்றப்பட்ட நிலையில் இருந்த வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஊறியிருந்த சுவர் இடிந்து சிறுவன் மீது விழுந்தது.
அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்ட போது சிறுவன் வழியிலேயே உயிரிழந்தார்.







