நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவின் நிச்சயதார்த்தம்..!
நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவின் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதற்கான புகைப்படத்தை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாளை முன்னிட்டு இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்ளப்போவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.







