--- --:--:-- --

சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக காதலி ரியா வீட்டில் சோதனை..!

7

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக அவரது மேலாளர் சேமியுள் மிரண்டாவை பிடித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

 

பண பரிமாற்றம் செய்வது குறித்து அவரது காதலியான சக்கரவர்த்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அப்போது ரியாவின் வாட்ஸ்-அப் உரையாடல்களை ஆய்வு செய்ததில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது.

 

இதுதொடர்பாக ரியாவிடம் விசாரணை நடத்துமாறு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அமலாக்கத் துறை கேட்டுக் கொண்டது. இந்நிலையில் மும்பையில் ரியா மற்றும் அவரது சகோதரர் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர்.

 

மேலும் முன்னாள் மேலாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து அவரை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon