தமிழகத்தில் மீண்டும் 6 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு…! இன்று 6352 பேருக்கு தொற்று உறுதி..! 87 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று இன்று 6352 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் கடந்த ஒரு மாதமாகவே ஏற்றம் இறக்கமின்றி ஒரே மாதிரியாக தினசரி பாதிப்பு 6 ஆயிரத்திற்குள்ளும், உயிரிழப்பு 100 என்ற அளவிலும் பதிவாகி வந்த நிலையில் இன்று 6 ஆயிரத்தை தாண்டி மீண்டும் வேகமெடுத்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 6352 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு தாண்டி 4, 15,590 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் உயிரிழப்பு 87 ஆக பதிவான நிலையில். மொத்த எண்ணிக்கை 7,137 ஆக உயர்ந்து உள்ளது.
அதிக பாதிப்பு
சென்னையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்தே பதிவாகி வருகிறது. இன்று 1285 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 1.33 லட்சமாக உயர்ந்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிகபட்சமாக 491 பேருக்கும், சேலத்தில் 432 , கடலூரில் 420, திருவள்ளுரில் 282, செங்கல்பட்டில் 306, காஞ்சிபுரம் 241, என மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, சேலம், கடலூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







