அருப்புக் கோட்டையில் சிவபெருமான் கண்களை திறந்ததாக வதந்தி..!
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் சிவபெருமான் கண்களை திறந்ததாக வந்த வதந்தியை நம்பி இரவு நேரத்தில் ஏராளமான மக்கள் ஒன்று திரண்டனர். அங்குள்ள ஸ்ரீ அய்யனார் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியில் உள்ள சிவலிங்கம் நேற்று இரவு திடீரென கண் திறந்ததாக காட்டுத்தீ போல பரவியது.
இதனை நம்பிய பொதுமக்கள் சாரை சாரையாக கோவிலுக்கு வந்து சிவனை தரிசனம் செய்தது மட்டுமின்றி செல்போனிலும் படம் எடுத்து சென்றனர்.







