திண்டுக்கல்லில் வாகன சோதனையின்போது தலைமை காவலரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள்..!
திண்டுக்கல்லில் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தியதால் ஆத்திரமடைந்த இரண்டு பேர் தலைமை காவலரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
நெடுஞ்சாலை ரோந்து வாகன தலைமை காவலர் திருப்பதி என்பவர் கன்னிவாடி காவல் நிலையம் அருகே பணியில் இருந்த போது ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் எழுதி கையில் வைத்திருந்த பையை திறந்து காட்டச் சொன்ன போது வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டி விட்டு இருவரும் தப்பியோட முயன்றபோது மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த மணிகண்டன் என்பவர் உடனடியாக பிடிபட்டான். மற்றொருவனை போலீசார் தேடி வருகிறார்கள்.






