குறும் படத்தில் நடிக்க வாய்ப்பு தராததால் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் ..!
குறும் படத்தில் நடிக்க வாய்ப்பு தராததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக துணை நடிகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்ற படப்பிடிப்பில் நடிக்க வந்த குழலை சேர்ந்த துணை நடிகர் கேனி ஜான் திருப்பி அனுப்பப் பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த அவர் காவல் நிலையத்தை செல்போனில் தொடர்பு கொண்டு நட்சத்திர விடுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். மோப்ப நாய் மூலம் போலீசார் நடத்திய சோதனையில் அது வதந்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போலீசார் கைது செய்தனர்.






