--- --:--:-- --

கொரொனாவால் பாதிக்கப்பட்ட கணவன் மது குடிக்க உதவிய மனைவி…!

13

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட கொரொனா நோயாளி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவ உணவில் மதுவை மறைத்துக் கொண்டு வந்து கொடுத்ததாக அவரது மனைவி மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.

 

அம்மாபேட்டையை சேர்ந்த முத்துக்குமரன் 2 பேரும் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதும் இல்லாமல் பிற நோயாளிகள் மருத்துவர்களை ஆபாசமாக பேசியதாக சொல்லப்படுகிறது.

 

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரில் நோயாளி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அவரது மனைவியே உணவில் மதுவை மறைத்துக்கொண்டு கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon