உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றிய 12 வயது சிறுவன்..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றில் குறித்த இளைஞரை சிறுவன் ஒருவன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினான். நைனீட்டால் மாவட்டம் ராம் நகர் அருகே பாலத்தில் சென்ற ஒருவன் திடீரென ஆற்றில் குதித்தான். அவரை காப்பாற்றுவதற்கு யாரும் முன்வராத நிலையில் 12 வயதேயான சிறுவன் ஆற்றில் குதித்து அந்த இளைஞனை காப்பாற்றியுள்ளான்.
வெள்ளத்தில் நீந்தி சென்று அந்த சிறுவன் நீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞனை இழுத்து வந்து அருகில் இருந்த பாறையில் கிடத்தினான். அதற்குள் தகவல் அறிந்து வந்த போலீசார் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.







