பெற்றோரின் சொத்தில் மகளுக்கும் சரி பங்கு உண்டு – உச்சநீதிமன்றம்
ஹிந்து கூட்டுக் குடும்பங்களில் மகள்களுக்கும் சமமான சொத்துரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடைமுறைக்கு வந்த ஹிந்து சொத்துரிமை திருத்த சட்டம் செல்லும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக தாக்கலான வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அளித்த தீர்ப்பு 2005இல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த திலிருந்துமகள்களுக்கு சொத்துரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகன்களுக்கும், மகள்களுக்கும் பெற்றோரின் சொத்தில் சரி சமமான பங்கு வழங்கி சொத்துரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது .இந்த தீர்ப்பு அளித்த நீதிபதி அருண் மிஸ்ரா வாழ்நாள் முழுவதும் மகள்கள் பெற்றோரின் அன்புக்குரிய மகள் களாகவே இருப்பார்கள் எனக் கூறினார்.







