--- --:--:-- --

அம்மோனியம் நைட்ரேட்டை பிரித்து வேறு வேறு வெடி கிடங்குகளில் சேமிக்க முடிவு..!

3

சென்னை மணலியில் உள்ள சுமார் 700 டன்அமோனியம் நைட்ரேட்டை சிறு சிறு அளவாக பிரித்து தமிழகத்தின் பல்வேறு வேதி கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

2015 ஆம் ஆண்டில் உரிய ஆவணங்களின்றி கரூரை சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம் இறக்குமதி செய்த 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் சென்னை துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டு மணலியில் வேதி கிடங்கில் வைக்கப்பட்டது.

 

லெபனானில் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறி பெரும் பாதிப்பை ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு சென்னை காவல்துறை, துறைமுக அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மற்றும் ஆலோசனை மேற்கொண்டனர்.

 

முதற்கட்டமாக அமோனியம் நைட்ரேட்டை சிறு சிறு பகுதிகளாக பிரித்து காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வேதி கிடங்குகளுக்கு அனுப்பி பாதுகாத்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon