--- --:--:-- --

விமானத்தை மிஸ் பண்ணியதால் உள்ளூர் 20 ஓவர் தொடரில் இருந்து விலகியுள்ள ஃபேபியன் ஆலன்..!

4

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஃபேபியன் ஆலன் விமானத்தை தவற விட்டதால் உள்ளூர் 20 ஓவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஜமைக்காவை சேர்ந்த ஃபேபியன் ஆலன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க விமானம் மூலம் பார்படா செல்ல திட்டமிட்டிருந்தார்.

 

பயண திட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக கடைசி நேரத்தில் ஃபேபியன் ஆலன் விமானத்தை தவற விட்டு உள்ளார். தொடர் நடைபெறும் டிரினிடாவிற்கு செல்ல இருந்த கடைசி விமானமும் அதுவே என தெரிகிறது. டிரினிடாவிற்கு செல்ல வேறு வாய்ப்பு இல்லாததால் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon