குடிப்பதற்காக வைத்திருந்த பணத்தை எடுத்து செலவு செய்த தாயை அடித்துக்கொன்ற மகன்..!
குடிப்பதற்காக வைத்திருந்த பணத்தை எடுத்து குடும்ப செலவு செய்த தாயை மகங்களை அடித்துக் கொலை செய்திருப்பது ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வ.உ.சி வீதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சரோஜாவை 2000 ரூபாய் பணத்துக்காக அவரது மகன்கள் விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் கொலை செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த இருவரும் வீட்டில் வைத்திருந்த 2000 ரூபாய் பணத்தை தேடியுள்ளனர். அப்போதுதான் பணமில்லாததால் சரோஜாவிடம் அது குறித்து அவர்கள் கேட்டபோது வீட்டுத் தேவைக்காக பணத்தை எடுத்து செலவு செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் தாய், மகன் கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் இரும்பு கம்பியை எடுத்து சரோஜாவை தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த சரோஜாவை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்ததாக கூறி ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
அதன்பிறகு சரோஜா குறித்த விவரம் தெரியாததால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சிலர் ஈரோடு தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். குடிக்க வைத்திருந்த பணத்தை எடுத்து குடும்ப செலவு செய்ததால் தாயை அடித்துக் கொலை செய்ததாகவும் கொலையை மறைக்க ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற மயானத்திற்கு வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சரோஜாவின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






