பொதுப்பணித்துறையின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்..!
பொதுப்பணித்துறையின் கீழ் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்துவைத்தார். கண்டியார் கோட்டை கிராமத்தில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21 திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டியுள்ளார்.
குறிப்பாக தேனி, ராமநாதபுரம், ஈரோடு, புதுக்கோட்டை, திருப்பூர், நாகப்பட்டினம், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தலைமை செயலகத்தில் இருந்து அவர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
நாகூர் தர்காவில் சந்தனக்கூடு ஆண்டுதோறும் நடக்கும். அதற்கான 20 கிலோ சந்தன கட்டைகளை வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் தர்காவின் நிர்வாக குழுவிடம் வழங்கியிருக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் உட்பட பல்வேறு அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக வணிகவரித் துறை சார்பாக 12 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கடையநல்லூர் ராமநாதபுரம், தாமரைப்பட்டி, கொன்னூர் ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய கட்டடக்கலை கட்டுமான பணிகளை அவர் தொடக்கி வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்த பணிகளில் இடம்பெற்றிருப்பதற்கான பணி நியமன ஆணையையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார்.






