குடிநீர் வசதி இல்லாததால் கொரொனா நோயாளிகள் வாக்குவாதம்..!
தமிழகத்திற்கு கொரொனா தொற்று நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்நிலையில் கொரொனாவால் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு சில மருத்துவமனையில் சரியான வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் இரண்டு நாட்களாக குடிநீர் இல்லாமல் கொரொனா நோயாளிகள் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குடிப்பதற்கும் தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.






