நீரில் மிதந்து செல்லும் விமானத்தை கண்டுபிடித்துள்ள சீனா..!
சீனாவின் ஷங்காய் மாகாணத்தின் கடற்பகுதியில் நீரில் மிதந்து செல்லக் கூடிய விமானம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. முழுக்க முழுக்க சீன அரசு விமான தொழில் கழகத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம் அரை மணி நேர சோதனை ஓட்டத்தின்போது நிலத்திலிருந்து ஏவப்பட்டு கடல் மீது வெற்றிகரமாக வலம் வந்த பிறகு மீண்டும் நிலப்பரப்புக்கு திரும்பியது.
தொங்ளன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏஜி600 ரக விமானத்தை அதிக எண்ணிக்கையில் தயாரித்து வரும் காலத்தில் தீயை கட்டுப்படுத்தவும் கடலில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கவும் பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.







