கோவையில் காவலர்களுக்கு கொரோனா எதிரொலி.5 வதாக உக்கடம் நிலையமும் மூடப்பட்டுள்ளதால் காவல் துறையினர் அதிர்ச்சி !!!
கோவையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களை குறி வைத்த கொரோனா வைரஸ் தற்போது காவல் துறையினரையும் விட்டுவைக்கவில்லை.
கோவை மாவட்டத்தில் போத்தனூர்,துடியலூர்,சூலூர் உள்ளிட்ட காவல் நிலைய காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அக்காவல் நிலையங்கள் மூடப்பட்டன.
இந்த நிலையில் நேற்று மதுக்கரை காவல் நிலையத்தை சேர்ந்த 7 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து அனைவரும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த நிலையில் இன்று உக்கடம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து உக்கடம் காவல் நிலையமும் மூடப்பட்டது.தற்காலிகமாக வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் சமுதாயக்கூடத்தில் செயல்பட்டு வருகிறது.காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் காவலர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு 5 காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ள சம்பவம் காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






