வயலில் தோன்றிய பூ போன்ற வடிவம்..! ஆச்சர்யத்தில் திகைக்கும் மக்கள்..!
பிரான்சின் கோதுமை வயலில் தோன்றியுள்ள பயிர் வட்டத்தை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் கண்டு களிக்கின்றனர். மன்னர் காலத்தில் மாவீரர்களை கவுரவிக்க அவர்களின் ஆடை மற்றும் கேடயங்களில் பொறிக்கப்படும் சிலுவைச் சின்னத்தை போல் காட்சியளிக்கும் இந்த பயிர் வட்டத்தை பார்வையிட பிரான்சின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் படை எடுப்பதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பயிர்வட்டங்கள் வேற்று கிரக வாசிகளால் உருவாக்கப்படுவதாக வதந்தி பரவி வரும் நிலையில் அதன் தோற்றத்திற்கான விஞ்ஞானபூர்வமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.







