--- --:--:-- --

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் பதவியேற்பு ..!

5.1

கோவை, நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அருளரசு பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோவையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் சாலை விபத்துகளை தடுப்பதிலும் அதிக கவனம் செலுத்த உள்ளதாக கூறினார். மேலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் 9 4 9 8 1 2 2 4 2 2 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

 

இதைப்போல நாமக்கல் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக சக்தி கணேசன் பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொதுமக்களுடன் காவல்துறையினர் சுமூகமாக பழகுவதை ஊக்குவிக்கும் வகையில் மனநல பயிற்சிகள் அளிக்கப்படும் என கூறினார். மதுரை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக சுஜித்குமார் பதவி ஏற்றுக்கொண்டார்.

 

மதுரையில் குழந்தை திருமணங்களை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஜித் குமார் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் புதிய காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon