பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரொனா தொற்று உறுதி..!
பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, அமிதாப் பச்சன் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் .
மேலும் தனது குடும்பத்தினர் ஊழியர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரொனா தொற்று உறுதியானது.
இதனை அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த செய்தியை அறிந்து திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.







