மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் ரத்து – மு.க.ஸ்டாலின் கண்டனம்..!
மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் முடிவை கைவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சரை முன்னிறுத்தும் விளம்பரங்களுக்கோ, அவசியமில்லாத டெண்டர்களுக்கோ நிதி ஒதுக்குவதை அரசு தள்ளி வைப்பது இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி நிலைமை காரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதிக்கு முன் ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களுக்காக போராடிய மருத்துவர்களின் ஓய்வு ஊதிய உயர்வை ரத்து செய்தது மாபாதகச் செயல் எனவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.







