வாட்ஸ் ஆப் இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி..!
பயனாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அனிமேஷன் ஸ்டிகர்ஸ் மற்றும் க்யூஆர் குறியீடு ஆகிய புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கியுள்ளது. வாட்ஸ்அப் உரையாடலின்போது கிப்ட் மற்றும் ஸ்மைலி பயன்படுத்துவது போன்று அனிமேஷன் ஸ்டிக்கர்ளையும் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதே போல க்யூஆர் கோடை பயன்படுத்தி ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிதாக ஒரு நபரின் காண்டக்டை செல்போன் தொடர்பில் சேர்க்க விரும்பினால் எண்ணை வாங்கி டைப் செய்ய வேண்டிய அவசியம் தேவை இல்லை.
அவரது க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் தானாக உங்கள் வாட்ஸ் அப்பில் அவர்களது தொடர்பு இணைந்து விடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதிகளை ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு பயனாளர்கள் தங்களின் பதிவுகளை புதுப்பித்தலின் மூலம் பெறலாம்.






