--- --:--:-- --

புதுச்சேரியில் பிரபல பெண்தாதா திடீரென தலைமறைவு..!

12

மதுக் கடை உரிமையாளரை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் மீண்டும் சிக்கி உள்ள புதுச்சேரி பிரபல பெண் தாதா எழிலரசி தலைமறைவாகிவிட்டார். காரைக்காலில் வசிக்கும் மது கடை உரிமையாளர் வெங்கடேஷ் என்பவரின் வீட்டிற்கு சென்ற மூன்று பேர் எழிலரசி அனுப்பியதாக கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதற்காக எழிலரசி பேச விரும்புவதாக கூறிய அவர்கள் செல்போனை கொடுத்துள்ளனர்.

 

இதற்கு உடன்படாத வெங்கடேஷ், காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீரவல்லபனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் பேரில் எழிலரசியின் ஆட்கள் 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இதையறிந்த எழிலரசி வீட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாகி விட்டார்.

 

கொலை மற்றும் பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள எழிலரசியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநில முன்னாள் சபாநாயகர் வி‌எம்‌சி சிவக்குமார் 2017 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்டவர் எழிலரசி.

 

இவ்வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலையான எழிலரசி மீண்டும் ஒரு வழக்கில் சிக்கியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon