தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு குறைவு… 3616 பேருக்கு தொற்று உறுதி.. 65 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கு கீழாக 3616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உயிரிழப்பு 65 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இந்த ஜுலை மாதத்தில் 2-ம் தேதி முதல் 4 நாட்களாக 4 ஆயிரத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வந்தது. நேற்று இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு கீழே குறையத் தொடங்கியது. சென்னையிலும் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே வெகுவாக குறையத் தொடங்கி சென்னை வாசிகளின் பீதியை குறைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,203 பேர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும்,, தமிழகத்தில் இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று 4,545 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 71,116ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் பலியாகி உள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,636 ஆக உயர்ந்து உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






