--- --:--:-- --

சென்னையில் 750 படுக்கைகளுடன் அதி நவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை திறப்பு… டி.வி,, நூலகம், வைஃபை, யோகா என சிறப்பு வசதிகளும் உண்டு!!

unnamed (1)

கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் 15 நாட்களில் தயாரான அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 750 படுக்கைகளுடன் உருவாகியுள்ள இந்த சிறப்பு மருத்துவமனையில், வெண்டிலேட்டர் வசதி, 300 அவசர பிரிவு படுக்கைகள் மற்றும் டி.வி.,வை ஃபை, நூலகம், யோகா பயிற்சி போன்ற சிறப்பம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. சமீப நாட்களாக பாதிப்பு மற்றும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 1,14,978 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 66,751 பேர் குணமடைந்துள்ளனர். நாளுக்கு நாள் உயிரிழப்பும் அதிகரித்து 1571 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தான் பாதிப்பும், உயிரிழப்பும் பல மடங்கு அதிகமாகி, தமிழகத்தின் மொத்த பாதிப்பில் கிட்டத்தட்ட 60% அளவுக்கு (70,017 பேர்) சென்னையில் பதிவாகியுள்ளது. மொத்த உயிரிழப்பிலும் 70% அளவுக்கு சென்னையில் நிகழ்ந்து 1082 பேர் பலியாகி டாப்பில் உள்ளது. இப்படி சென்னையில் பாதிப்பு அதிகரித்த நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் சிகிச்சை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழல் உருவாக ஆரம்பத்தது.

இதனால் சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியவர் நல மையத்தை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் பணி விறுவிறுப்பாக நடந்தது. 750 படுக்கை வசதிகளுடன்,15 நாட்களில் இந்த நவீன மருத்துவமனை தயாராகி உள்ளது.

 

இந்த மருத்துவமனையில் அவசர நோயாளிகளுக்கென 70 வெண்டிலேட்டர், 300 ஆக்சிஜன் வழங்கும் சிறப்பு படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் டி.வி. வசதி, வைஃபை வசதி, நூலகம், யோகா பயிற்சி என சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ள இந்த அதி நவீன கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

Leave a Reply

Right Menu Icon