விஷாலின் மேலாளருடைய கார் கண்ணாடி உடைப்பு…போலீசார் விசாரணை..!
நடிகர் விஷாலின் மேலாளர் உடைய கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் . கோடம்பாக்கத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் விஷால் மேலாளராக பணிபுரிகிறார்.
தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்த அவர் இன்று காலை வந்து பார்த்த போது கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை அடுத்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







