--- --:--:-- --

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்..!

8

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தளர்வு களுடன் கூடிய பொது முடக்கம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கொரொனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனை தடுக்கும் முயற்சியாக கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

 

இந்த முழு முடக்க நடைமுறை நேற்று நிறைவு பெற்றது. இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon