--- --:--:-- --

இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ மீட் ஆப்..! இனி ஜும் செயலிக்கு ஆப்பு!

8

முகேஷ் அம்பானி தலைமையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜியோ சிம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல சலுகைகள் வழங்கப்பட்டதால் ஜியோ வாடிக்கையாளர்கள் மலமலவென அதிகரித்தனர். இந்த நிலையில் பிரபல வீடியோ கான்பரன்சிங் தளமான ஜும் ஆப்பில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக மத்திய அரசு தடை தொடர்ந்து கூறிவருகிறது.

 

இந்த நிலையில் அதே வீடியோ கான்பரன்சிங் தளமாக ஜியோ மீட் என்ற ஆப்பை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை இரவு தனது வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை சிறிய அளவிலான ரசிகர்கள் உடன் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ மீட் ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

ஜியோ மீட் மூலம் 100 பேருடன் வீடியோ கான்ப்ரான்சிங் நடத்த முடியும். தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ஐடியுடன் ஜியோ மீட்டை பதிவு பெறலாம். ஒருநாளைக்கு எண்ணற்ற மீட்டிங்கை உருவாக்கலாம்.

 

இந்த ஆப்பின் பயன்பாடு பொதுமக்களுக்கு தற்போது தான் கிடைத்துள்ளது என்றாலும் ஜியோ இதை இரண்டு மாதங்களாக சோதித்து வந்துள்ளது. இதன் மூலம் இனி ஜும் ஆப் பயனர்கள் குறைந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Right Menu Icon