--- --:--:-- --

பாதாள சாக்கடை அமைக்கும் போது குழியில் தவறி விழுந்து மண்ணுக்குள் புதைந்து பலி..!

4

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். காரைக்குடி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

20 அடி ஆழத்தில் பைப் பொருத்தியபோது மண் சரிந்ததில் கோவையை சேர்ந்த கூலித் தொழிலாளியான ராஜா என்ற சின்ராசு மண்ணில் புதைந்தார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினரின் ஈடுபட்ட நிலையில் ஒரு மணி நேரத்திற்குப் பின் ராஜா சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon