--- --:--:-- --

நடிகை பூர்ணாவுடன் டிக் டாக்கில் பழகி ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்திய மோசடி கும்பல்..!

7

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடிவீரன் உள்ளிட்ட ஏராளமான தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார் நடிகை பூர்ணா என்கிற காஸிம் . தற்போது புதிய பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் பாடலுக்கு சினிமாவில் நடனம் ஆடி வரும் பூர்ணா, காசிம் என்ற பெயரில் டிக்டாக்கில் கணக்கு தொடங்கி அதில் தனது திறமையை காட்டி வந்தார்.

 

இந்த நிலையில் கேரள மாநில மாநாட்டு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் பூர்ணாவை திருமண மோசடி கும்பல் ஒன்று பணம் கேட்டு பிளாக்மெயில் செய்ததாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். அதில் அன்வர் என்ற பெயரில் மூலம் தன் மகளிடம் அறிமுகமான நபர் தான் கோழிக்கோட்டில் துபாயிலும் பெரிய நகைக் கடை வைத்திருப்பதாகவும் தற்போது துபாயில் வசிப்பதாக கூறி பழகியுள்ளார்.

 

இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில் பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள அந்த நகைக்கடை அதிபர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதனை உண்மை என்று நம்பி பூர்ணாவும் தனது வீட்டிற்கு குடும்பத்தினருடன் வந்து பெண் கேட்க கூறியுள்ளார். அதன்படி கடந்த மூன்றாம் தேதி அன்வரின் குடும்பம் என 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெண் கேட்டு வந்துள்ளது.

 

பழகிய அன்வர் மட்டும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பூர்ணா அந்த கும்பலைச் சேர்ந்தவர்களிடம் நைசாக பேசி இன்னொரு நாளில் திருமணம் குறித்து பேசலாம் என்று அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்த கார் வீட்டின் வெளிப்புற பகுதி போன்றவற்றை செல்போன் மூலம் படம் பிடித்தனர்.

 

அதை சிசிடிவி காட்சிகளின் மூலம் கண்டறிந்த பூர்ணா அன்வர் என்ற டிக்டாப் பிரபலம் பெயரில் பேசியவர் போலி என்பதை கண்டுபிடித்தார். அந்த நபர் ரஃபிக் என்பது தெரிய வந்த நிலையில் சினிமா வாழ்க்கையை கெடுக்காமல் இருக்க வேண்டுமானால் தங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று மிரட்டியதாக அந்த புகாரில் பூர்ணாவின் தாய் கூறியிருந்தார்.

 

இதையடுத்து அந்த திருமண மோசடி கும்பலை சேர்ந்த ரமேஷ், கிருஷ்ணன், சிவகாசி ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்று நடிகைகளிடம் கதை விட்ட இந்த கும்பலை சேர்ந்தவர்கள் திருச்சூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது . இந்த மோசடி கும்பல் டிக் டாக் மூலம் பூர்ணாவை காதல் வலையில் வீழ்த்தி திருமண மோசடியில் ஈடுபட திட்டமிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதற்கிடையே இந்த மோசடி கும்பலுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்தும் மிரட்டுவதால் தமக்கு பாதுகாப்பு கேட்டு குடும்பத்துடன் காவல் உயர் அதிகாரியை சந்தித்து நேரில் புகார் அளித்ததாக கூறி விளக்கம் அளித்துள்ளார்.

 

மேலும் மாடல் பெண்கள் மூன்று பேரிடம் டிக் டாக் மூலம் பழகி நடிக்க வாய்ப்பு தருவதாக ஏமாற்றி அழைத்து சென்று லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அதில் ஒரு பெண்ணை வீடியோ எடுத்து வைத்து தங்கம் கடத்தலுக்கு பயன்படுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மற்றொரு பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் அவர் அணிந்திருந்த இரண்டரை சவரன் நகையை பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon