வங்கி அதிகாரி போல் நடித்தவனை திட்டிய பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பப்பட்டதால் அதிர்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஏடிஎம் எண்களை செல்போன் மூலம் கேட்ட போலி வங்கி அதிகாரியைதிட்டிய பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்கள் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டில் பாட்டை சேர்ந்த ரோஸ் என்பவரை ஞாயிற்றுக்கிழமை செல்போன் மூலம் அழைத்த நபர் வங்கி கணக்கு ஆய்வு எனக்கூறி ஏடிஎம் கார்டு எண்களை கேட்டுள்ளார்.
இதுபோன்ற திருட்டுக் கும்பலிடம் கடந்த ஆண்டு ஏமாந்து எட்டாயிரம் ரூபாய் இழந்த அந்த ரோஸ் இம்முறை சுதாரித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை எந்த வங்கி செயல்படுகிறது எனவும் நீங்கள் உண்மையில் அதிகாரியா என்றும் கேட்டு கோபத்துடன் திட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து மர்ம நபர் வாட்ஸ் அப்பில் ஆபாச படங்களை அனுப்பியதால் ரோஸ் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






