--- --:--:-- --

காமுகன் காசி மீது பதியப்பட்டுள்ள 6 வழக்குகள்!

6.1

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் கைதான காசி மீது பதியப்பட்டுள்ள ஆறு வழக்குகளிலும் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டான்.

 

அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சிலர் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. காசி மீதான 6 வழக்குகளில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹார்லி டேவிட்சன் பைக் மோசடி வழக்கு ஒன்று. அந்த வழக்குக்காக ஆவணங்களைத் திரட்டி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

 

விலை உயர்ந்த பைக் காசியின் பெயருக்கு மாறியது எப்படி என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் வங்கி மேலாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon