தமிழக முதல்வர் தலைமையில் கோவையில் இன்று ஆய்வுக்கூட்டம் !!!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள்,கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் அத்திக்கடவு- அவிநாசி நீரேற்றும் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

முன்னதாக பில்லூர் 3 ஆம் அபிவிருத்தித்திட்டம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற புதிய திட்ட பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்க உள்ளார்.






