கொந்தகை அகழாய்வில் 75செ.மீ அளவில் குழந்தையின் முழு எழும்பு கூடு கண்டெடுப்பு!
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகையில் நடைபெறும் 6ம் கட்ட அகழாய்வில் நான்குவது குழியில் தோண்டும் போது 75செ.மீ குழந்தையின் முழு எலும்பு கூடுகள் கண்டு எடுக்கபட்டு உள்ளன . ஏற்கனவே கொந்தகையில் அகழாய்வு நடைபெறும் இடத்தில் இருந்து 100மீட்டர் தொலைவில் கதிரேசன் என்பவர் இடத்தில் சில நாட்கள் முன் தென்னை மரம் வைப்பதற்கு குழி வெட்டும் போது மண்டை ஒடுடன் எழும்புகள் எடுக்கபட்டன.
அதன் பின் அகழாய்வு நடக்கும் கொந்தகையில் எட்டு முதுமக்கள் தாழி கண்டு எடுக்கபட்டு அதில் முன்றில் மனித எழும்புகள் எடுக்கபட்டன. அதனை தொல்லியல் துறையினர் ஆய்வுக்கு அனுப்பிய நிலையில் இன்று நான்காவது குழியில் அகழாய்வு செய்யும் போது 75செ.மீ நீளமுள்ள குழந்தைகள் எழும்புகள் கண்டு பிடிக்கபட்டு தொல்லியல் துறை துனை இயக்குனர் சிவனாந்தம் தலைமையில் ஆய்வு செய்து வருகின்றனர்.
கொந்தகையில் தொடர்ந்து மனித எழும்புகளும் தற்போது குழந்தையின் எழும்புகளும் கண்டு எடுக்கபட்டு இருப்பது தொல்லியதுறை ஆய்வாளர்கள் இடையே வேகத்தை அதிகரித்து உள்ளது.






