--- --:--:-- --

நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான 2,300 கிலோ வைரம் பறிமுதல்!

13

இந்திய தொழிலதிபர்கள் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான 2 ஆயிரத்து 300 கிலோ எடை உள்ள பட்டை தீட்டப்பட்ட வைரம் மற்றும் முத்துகளை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சுமார் ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் ஹாங்காங்கில் இருந்து மும்பை கொண்டுவரப்பட்டன.

 

வைர வியாபாரியான நீராவ் மோடியும் அவரது உறவினரான மெகுல் சோக்சியும் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இருவரும் வெளிநாடு தப்பி சென்ற நிலையில் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மெகுல் சோக்சி அந்த நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.

 

இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் அமலாக்கத்துறை இருவருக்கும் சொந்தமான பல்வேறு சொத்துக்களை பறிமுதல் செய்தது. இருவரும் தங்களுக்கு சொந்தமான வைரம் மற்றும் முத்துக்களை துபாய்க்கு கடத்தி சென்று பின்னர் ஹாங்காங் கொண்டு சென்றதாக தெரிகிறது.

 

இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறை தற்போது நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான 2 ஆயிரத்து 300 கிலோ எடையுள்ள பட்டை தீட்டப்பட்ட வைரம் மற்றும் முத்துக்களை பறிமுதல் செய்தனர்.

 

பண மோசடி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட இந்த நகைகள் ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் ஆகும் அவை அனைத்தும் 108 சரக்கு பெட்டிகளில் மும்பை கொண்டு வரப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon