--- --:--:-- --

ஜம்மு – காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

13

ஜம்மு காஷ்மீரில் 2வது நாளாக நீடித்து வரும் தேடுதல் வேட்டையில் மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மொத்தமாக 24 மணி நேரத்தில் மட்டும் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

தெற்கு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள சோபியான் மாவட்டத்தில் ரேமாண்ட் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ஞாயிறன்று ராணுவத்தினர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

இந்த நிலையில் இன்று காலையில் வெடித்த துப்பாக்கி சண்டையில் மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளம் குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் தெரியாத போதும் அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon