--- --:--:-- --

நீட் தேர்வில் உள் இடஒதுக்கீடு – ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல்

12

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அமைக்கப்பட்ட ஆய்வு குழு முதலமைச்சரிடம் இன்று அறிக்கை தாக்கல் செய்தது.

 

அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இது தொடர்பாக ஆய்வு செய்து ஒரு மாதத்தில் பரிந்துரை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு குழு அமைத்தது.

 

இந்த குழு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களுடன் ஆலோசனை நடத்தி கருத்துக்களைக் கேட்டறிந்தது. இதையடுத்து கலையரசன் குழு தனது ஆய்வறிக்கையை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது. 15% முதல் 20% வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க அந்த குழு பரிந்துரைத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Right Menu Icon