--- --:--:-- --

திருவாடானை அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல் விபத்தில் இருவர் பலி

0.5

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளையன் குன்று பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சிவா30, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அழகன் மகன் சிவக்குமார் 30, இருவரும் தொண்டியிலிருந்து டூவிலரில் ராமநாதபுரம் நோக்கி வந்துள்ளனர்.

 

திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே படப்பை கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமையா, மகன் கலைச்செல்வம்23, இவர் தேவிபட்டிணம் பகுதியில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக உள்ளார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலை சொந்த ஊரான படப்பை கிராமத்திற்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு டூவிலரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

 

மூவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதில் கலைச்செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வரும் வழியில் இறந்து விட்டார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தலையில் காயமடைந்த சிவா சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். சிவக்குமாருக்கு கை எலும்பு முறிந்துள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

கடந்த 15 வருடங்களுக்கு முன் கலைச்செல்வத்தின் அண்ணன் ராஜேஷ் பள்ளிசெல்லும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்டார். இரண்டு மகன்களையும் சாலை விபத்தில் இழந்துவிட்ட நிலையில் விவசாயி ராமையா மற்றும் உறவினர்கள் ஆறுதல் சொல்ல முடியாத வகையில் சோகத்தில் உள்ளனர்.விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon