--- --:--:-- --

சென்னையில் சமூகப்பரவல் வந்துவிட்டதா இல்லையா ?

14

சென்னையில் சமூக பரவல் வந்து விட்டதா இல்லையா என ஆய்வு செய்து அறிவியல் ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

ஜூன் 4 வரை 398 பேர் சென்னையில் கொரொனாவிற்கு இறந்து இருப்பதாக உளவுத்துறை தெரிவிப்பதாகவும் அதனை மறைத்து அரசு 167 மரணங்களை மட்டுமே கணக்கில் காட்டுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

வீட்டில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை உயிரைப் பறிக்கும் முக்கிய காரணி ஆகிவிட்டதோ என்று சந்தேகம் எழுவதாகவும் வீட்டிற்கு சென்று திடீர் மூச்சுத்திணறல் என திரும்பி வந்த எத்தனை பேரின் உயிர் போய் இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அரசு மருத்துவமனைகளில் நான்கு அல்லது ஐந்து தினங்களில் இருந்து இறந்தால் மட்டுமே கொரொனா மரண கணக்காக காட்டப்படுதாகவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon