--- --:--:-- --

திரைப்பட நடிகர் சுரேசுக்கு பிரதமர் நிதி கொடுக்க சொன்னதாக கூறி வந்த மோசடி அழைப்பு !

13

பிரதமர் நிதி உதவி கொடுக்க சொன்னதாக கூறி மோசடி செய்த நபர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நூதன முறையில் ஆன்லைன் மூலமாக மோசடி செய்த நபர்கள் பல வழிகளில் அதிகரித்து வருகிறார்கள்.

 

இந்த மோசடி குறித்து பொதுமக்களிடம் அடிக்கடி வங்கிகள் மூலமாகவும் தனிப்பட்ட முறையிலும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மான்குட்டி என்ற படத்தில் நடித்துள்ள திரைப்பட நடிகர் சுரேஷ் இதுபோன்ற மோசடி தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

 

அதில் சுரேஷ் மோசடி நபர் பிரதமர் தங்கள் வங்கி கணக்கில் பணம் போட சொல்லி இருப்பதாக கூறியிருக்கிறார் மோசடி பேர்வழிகள். அப்பாவிகளிடம் இதுபோல ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள் எனவே யாரும் ஏமாறாதீர்கள் என்று சுரேஷ் வீடியோ மூலமாக பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

வங்கிகள் எப்போதுமே கணக்கு எண், ரகசிய எண் உள்ளிட்ட விவரங்களை கேட்பதில்லை ரிசர்வ் வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு இதை குறுஞ்செய்தியாக தொடர்ந்து அனுப்புகின்றனர்.

 

ஊரடங்கு காலத்தில் மிகுந்த நெருக்கடியில் உள்ள மக்களிடம் மனசாட்சியே இல்லாமல் பணமோசடி செய்ய துடிக்கும் இதுபோன்ற மோசடிக்காரர்களை கண்டறிந்து காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon