அலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் சுறா தாக்கி உயிரிழப்பு!
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அருகே அலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் சுறா தாக்கி உயிரிழந்தார்.கிங்ஸ் கிலிஃப் அருகே கடலில் அலை பயிற்சி மேற்கொண்டிருந்த வீரர்களில் குயின்ஸ்லாந்து சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபரை சுறா தாக்கியது. உடன் இருந்த வீரர்கள் சுறாவிடம் இருந்து அந்த நபரை மீட்டு கரைக்கு இழுத்து வந்து முதலுதவி அளித்தனர்.
3 மீட்டர் நீளமுள்ள சுறா தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் நடப்பாண்டில் மட்டும் சுறா தாக்கி 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.






