ஜெ.அன்பழகன் விரைவில் நலம் அடைந்து பணிகளை தொடருவார்!
எம்எல்ஏ ஜெ அன்பழகன் விரைவில் குணமடைந்து பணிகளை தொடர்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். தொண்டர்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில் இயக்கத்தில் நலனை காப்பது போல அனைவரும் தங்கள் உடல் நலனை காத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜெ அன்பழகன் முழுமையான நலம் பெற்று மீண்டும் பழகி, பேசி பணிகளை கவனிப்பார் என்கிற நம்பிக்கை இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்திட வேண்டும் என்றும் வயதில் மூத்தவர்கள் உடல்நல பிரச்சனைகள் உடையவர்கள் கவனத்துடன் வீட்டிலேயே இருக்க வேண்டுமெனவும் தொண்டர்களை மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.






